Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவால் மாடல் பஞ்சாப் மக்கள் ஏற்றுள்ளனர் - மணீஷ் சிசோடியா

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (13:02 IST)
அரவிந்த் கெஜ்ரிவால் மாடல் நிர்வாகத்தை பஞ்சாப் மக்கள் ஏற்று வாக்களித்துள்ளனர் என மணீஷ் சிசோடியா பேட்டி. 

 
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 
 
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியை கடந்து முதல் வெற்றி இது என்பதால் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் துடைப்பங்களை கையில் ஏந்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அரவிந்த் கெஜ்ரிவால் மாடல் நிர்வாகத்தை பஞ்சாப் மக்கள் ஏற்று வாக்களித்துள்ளனர். இனி நாடு முழுவதும் உள்ள மக்கள், கெஜ்ரிவால் மாடல் ந்ர்வாகத்தை விரைவில் ஏற்பர் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments