Publish Date: Wed, 19 Jan 2022 (13:32 IST)
Updated Date: Wed, 19 Jan 2022 (13:32 IST)
டெல்லியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி தற்போது கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது என்பதும், இரு மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சற்று முன்னர் கோவா மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துள்ளார்
கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அமித் பால்கர் என * ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் கோவாவில் 40 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Mahendran
Publish Date: Wed, 19 Jan 2022 (13:32 IST)
Updated Date: Wed, 19 Jan 2022 (13:32 IST)