Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலையில் மட்டுமே நடைபெறும் லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர்: புதிய தகவல்

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (12:29 IST)
நாடாளுமன்ற லோக்சபா கூட்டத்தொடர் எப்பொழுதும் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முதலாக மாலையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
லோக்சபா மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த மழைக்கால கூட்டத்தொடர் மாலையில் மட்டுமே நடைபெறும் என்றும் செப்டம்பர் 15 முதல் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் செப்டம்பர் 14ஆம் தேதி ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை நடைபெறும் என லோக்சபா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
மேலும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  லோக்சபா கூட்ட தொடர் முதல் முதலாக மாலையில் மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, லோக்சபா உறுப்பினர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. கனமழை எச்சரிக்கை..!

ஓடும் ஆம்புலன்ஸில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை .. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையில் சர்வதேச கால்பந்தாட்ட பயிற்சியாளருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments