Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஸ்லைக்கா போடுறீங்க? இப்ப பாருங்க! – ஆப்சனை ஆஃப் செய்த பாஜக சேனல்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (12:22 IST)
சமீபத்தில் பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பலர் டிஸ்லைக் செய்து வந்த நிலையில் டிஸ்லைக் எண்ணிக்கையை மறைக்கும் ஆப்சனை பயன்படுத்தியுள்ளது பாஜக யூட்யூப் சேனல்.

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தால் நெப்போடிசம் மீது கோபமாக இருந்த மக்கள் ஆல்யா பட் நடித்த சடாக் 2 பட ட்ரெய்லருக்கு தொடர்ந்து டிஸ்லைக் செய்து ட்ரெண்ட் செய்தனர். இதனால் யூட்யூப் வீடியோக்களை டிஸ்லைக் செய்து எதிர்ப்பை தெரிவிப்பது ட்ரெண்டானது. சமீபத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றிய மன் கீ பாத் நிகழ்ச்சி பாஜக அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் பதிவேற்றப்பட்டது.

இந்நிலையில் அந்த வீடியோவிற்கு லைக்குகளை விட டிஸ்லைக்குகள் அதிகமானதால் பரபரப்பு எழுந்தது. இதனால் லைக் மற்றும் டிஸ்லைக் எண்ணிக்கையை பார்வையாளர்களுக்கு காட்டும் வசதியை பாஜக யூட்யூப் சேனல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் லைக்குகள் மற்றும் டிஸ்லைக்குகளின் எண்ணிக்கையை சாதாரண பார்வையாளர்கள் பார்க்க முடியாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments