Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் – ப சிதம்பரம் டிவிட்டரில் வாழ்த்து !

மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் – ப சிதம்பரம் டிவிட்டரில் வாழ்த்து !
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (15:57 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ப சிதம்பரம் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான மன்மோகன் சிங்கின் 87 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் ப சிதம்பரம் தனது டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் ‘முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். 100 ஆண்டுகள் கடந்தும் அவர் நலமுடன் வாழ வேண்டும். பொருளாதார சரிவை சரிசெய்ய மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவிலிருந்து நாட்டை வெளியே கொண்டுவரும் வழியை மன்மோகன் சிங்கால் மட்டுமே காட்ட முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில் ‘நாடாளுமன்றம் மற்றும் அரசியலில் மன்மோகன் சிங்கின் தலைமையில் நாடு பலன் பெற வேண்டும். இன்னும் பல ஆண்டுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜேந்திர பாலாஜியா ? – கலக்கத்தில் நாங்குநேரி அதிமுகவினர் !