Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியான ஒருசில நாட்களில் வெடித்து சிதறிய ஒன்ப்ளஸ் நார்டு2 மொபைல்: அதிர்ச்சி தகவல்

Advertiesment
ஒன்ப்ளஸ் நார்டு2
, செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (15:53 IST)
வெளியான ஒருசில நாட்களில் வெடித்து சிதறிய ஒன்ப்ளஸ் நார்டு2 மொபைல்: அதிர்ச்சி தகவல்
ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போன் வெளியாகி ஒரு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெடித்து சிதறியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
பெங்களூரை சேர்ந்த அனுகூர் சர்மா என்பவர் தனது மனைவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ் நார்டு2 வ்என்ற மொபைல் போனை வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் அவரது மனைவி கணவர் வாங்கி கொடுத்த ஒன்ப்ளஸ் நார்டு2 செல்போனை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொண்டு அந்த பெண் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வெடித்து சிதறியது
 
இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை அனுகூர்சர்மா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அதை ஒன் பிளஸ் நிறுவனத்திற்குக் செய்தார். அதற்கு பதிலளித்துள்ள ஒன் பிளஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட நபரை நேரடியாக தொடர்புகொண்டு இந்த இதுகுறித்து விசாரணை செய்யும் படியும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்ப்ளஸ் நார்டு2 என்ற மொபைல் போன் வெளியான நிலையில் அந்த மொபைல் போன் வெடித்து சிதறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் கிண்டிலில் அதிகமாக விற்பனையாகும் பெரியார் புத்தகங்கள்!