Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஜீவ சமாதி’க்கு உயில் எழுதி வைத்த நித்யானந்தா... ’பேஸ்புக் லைவ் வீடியோ’வில் பேச்சு !

Webdunia
வியாழன், 5 டிசம்பர் 2019 (14:10 IST)
நித்யானந்தா, இமயமலைச் சாரலில்  பதுங்கி இருப்பதை, உளவுத்துறை அமைப்பு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தான் ஜீவசமாதி அடையப் போவதற்கு உயில் எழுதி வைத்து விட்டதாக  இன்று தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் தனது பக்தர்களுக்கு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நித்தியானந்தாவின் முன்னாள் உதவியாளர் ஜனார்தா சர்மா, தனது இரு மகள்களை அடைத்து  வைத்து நித்யானந்தா கொடுமைப்படுத்துவதாக அளித்த புகாரின் பேரில், நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இந்தப் புகாரை அடுத்து  சிறுமிகளை தொந்தரவு செய்தது தொடர்பாக, ,நித்யானந்தா மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அவர்  தப்பி ஒடியதாக தகவல்கள் வெளியானது.
 
ஆனால், அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. அதனால், போலீஸார் நித்யானந்தாவை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ள நித்யானந்தா, கைலாஷ் என்ற பெயரில் ஒரு தனித் தீவை வாங்கி அதில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
நித்யானந்தா, தென் அமெரிக்கா நாடான ஈகவெடார் அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் விர்டுவல் ஹிந்து என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், நித்தியானந்தா, தற்போது, இமயமலைச் சாரலில்  பதுங்கியுள்ளதாகவும், உளவுத்துறை அமைப்பு அவரை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், இன்று தனது பேஸ்புக் வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது : நான் அணணாமலையாரைச் சுற்றி வந்து ஜீவ சமாதி அடைய வேண்டுமென உயில் எழுதி வைத்து விட்டேன். நான் கடவுளிடம் இருந்த பெற்ற கல்வி, செல்வம் நன்மைகளை மக்களுக்கு கொடுப்பேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி கவலைக்கிடம்: மாரடைப்பு அபாயம் என தகவல்..!

ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளி.. வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்..!

அன்பு, கருணை, மகிழ்ச்சி, சமாதானம்: கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய்..!

நடுவானில் சர்க்கரை நோயாளிக்கு வந்த ஆபத்து.. உயிரை காப்பாற்றிய மருத்துவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments