Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மருத்துவமனையில் அபிநந்தன் - நிர்மலா சீதாராமன் சந்திப்பு

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (17:41 IST)
பாகிஸ்தானில் இருந்து நேற்றிரவு சுமார் 9 மணிக்கு தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு நாடே சிறப்பான வரவேற்பு கொடுத்தது. குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களும் அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இன்று காலை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாரான அபிநந்தன் அவரிடம் பாகிஸ்தானில் நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்தபோது என்ன நடந்தது என்றும், பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் தளபதியிடம் அபிநந்தன் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து டெல்லி மருத்துவமனையில் அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இதற்காக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். நிர்மலா சீதாரமன், அபிநந்தன் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments