Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் திடீரென நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ திரைப்படம்.. என்ன நடந்தது தியேட்டரில்?

Siva
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (17:29 IST)
மும்பையில் மர்ம நபர் ஒருவரின் செயல் காரணமாக ‘புஷ்பா 2’திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில், நேற்று ஹைதராபாத்தில் படம் பார்க்க வந்த ஒரு பெண் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள பாந்த்ரா என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தியேட்டரில் ஸ்பிரே அடித்தார். இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு இருமல், தும்மல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. இதன் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து தியேட்டரில் விசாரணை செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு எதுவும் செய்யவில்லை என்றாலும், இந்த சம்பவம் காரணமாக சில நிமிடங்கள் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments