Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலி! அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலி! அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு!

Prasanth Karthick

, வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:09 IST)

ஹைதராபாத்தில் புஷ்பா 2 பார்க்க சென்ற பெண் பலியான விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடித்து நேற்று ரிலீஸான படம் ‘புஷ்பா 2’. இந்த படத்தின் முதல் பாகம் பெரும் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் நேற்று பல மொழிகளிலும் வெளியான இந்த படத்திற்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

 

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் பார்க்க பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் சென்றுள்ளார். அந்த சமயம் திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வருவதாக தகவல் வெளியானதும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிக்கி பெண் பரிதாபமாக பலியான நிலையில், 9 வயது மகன் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், அல்லு அர்ஜுன் வருவது குறித்து போலீஸாருக்கு தியேட்டர் நிர்வாகம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சந்தியா திரையரங்கம் மீதும், அல்லு அர்ஜுன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் நாளில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்ததா புஷ்பா 2?