Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – காதலுக்காக தாய் செய்த கொடூரம் !

Advertiesment
சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – காதலுக்காக தாய் செய்த கொடூரம் !
, புதன், 13 நவம்பர் 2019 (09:10 IST)
ஆந்திராவில் தன் கள்ளக்காதலனோடு தனிமையில் இருந்தததைப் பார்த்துவிட்ட தன் குழந்தையை தாயும் காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் அனில் மற்றும் ராமனாம்மா எனும் தம்பதிகள் வசித்து வருகின்றனர். இத்தம்பதிகளுக்கு இரு மகன்களும் துவாரகா எனும் 7 வயது மகளும் உள்ளனர். அனில் மதுபானக் கடை ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் இத்தம்பதிகளின் குழந்தையான துவாரகா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான பிரகாஷ் என்பவரின் மனைவி வெளியூருக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது தங்கள் வீட்டில் சந்தேகத்து இடமாக இருந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது காணாமல் போன சிறுமி துவாரகா அதில் சடலமாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் காவல்துறைக்கு அளித்த புகாரில் சடலம் கைப்பற்றப்பட்டது. பிடந்த நடந்த விசாரணையில் பிரகாஷிடம் நடந்த விசாரணையில் ‘ நானும் குழந்தையின் தாயான ராமானம்மாவும் கள்ளத்தொடர்பில் இருந்தோம்.  சம்பவம் நடந்த அன்று நாங்கள் தனிமையில் இருக்கும் போது குழந்தை அதை பார்த்து விட்டதாகவும் அதனால் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்தோம்’ என ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி – ஹேஷ்டேக் உருவாக்கி மக்கள் நீதிமய்யம் பதிலடி !