Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நைஜீரிய முதியவருக்கு ஆதார் அட்டை: அதிர்ச்சியில் அதிகாரிகள்

Advertiesment
நைஜீரிய முதியவருக்கு ஆதார் அட்டை: அதிர்ச்சியில் அதிகாரிகள்
, செவ்வாய், 12 நவம்பர் 2019 (23:21 IST)
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வெளிநாட்டில் இருந்து தஞ்சம் வந்தவர்களும், கிரிமினல் செய்ய வந்தவர்களும் சிலர் ஆதார் அட்டை பெற்றுள்ளதாக வெளிவந்த புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் புதுச்சேரி காலாப்பட்டு  என்ற பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து அங்குள்ள பொதுமக்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். 
 
அப்போது நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்யப்பட்டபோது அவரது பெயரில் ஆதார் அட்டை வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுனாமி குடியிருப்பில், தங்கியிருந்த மோசஸ் என்பவர், தனது நைஜீரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டியபோது, இந்த ஆதார் அட்டையும் சிக்கியது. 
 
நைஜீரியா சேர்ந்தவருக்கு எப்படி ஆதார் அட்டை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

104 வயது முதியவர் இறந்த அடுத்த நிமிடம் இறந்த 100 வயது மனைவி!