Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணீஸ் சிசோடியாவுக்கு மார்ச் 20 ஆம் தேதி வரை சிறை- நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (15:45 IST)
மணீஷ் சிசோடியாவை  வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை  சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கடந்த 26 ஆம் தேதி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவரை 27 ஆம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

இந்த நிலையில்,  கைது செய்யப்பட்ட சிசோடியாவை  4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ காவலில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள்( மார்ச் 6ஆம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது.

சிபிஐ காவல் முடிந்த நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிசோடியாவை சிபிஐ ஆஜர்படுத்தினர்.  இந்த விவகாரத்தில்,  மணீஸ் சிசோடியா தரப்பினர் அரசியல் செய்வதாக சிபிஐ தரப்பில் தெரிவித்தனர்.

எனவே, வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை சிசோடியாவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments