Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் பேருந்தில் சுய இன்பம் கொண்ட காமுகன்: ரூ.25,000 சன்மானம்!

Advertiesment
ஓடும் பேருந்தில் சுய இன்பம் கொண்ட காமுகன்: ரூ.25,000 சன்மானம்!
, சனி, 17 பிப்ரவரி 2018 (12:46 IST)
டெல்லியில் கடந்த 7 ஆம் தேதி அன்று, ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவரின் அருகில் அமர்ந்து காமுகன் ஒருவன் சுய இன்பம் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட மாணவி டெல்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.
 
கடந்த 7 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். எனது அருகே ஒரு ஆண் அமர்ந்திருந்தார். திடீரென அந்த நபர் அவரது முழங்கையால் எனது இடுப்பு பகுதியில் அவ்வப்போது உரசினார். நான் நகர்ந்து உட்கார்ந்தேன். 
 
மீண்டும் அவ்வாறு செய்தபோது அவரை கவனித்தேன். அப்போதுதான் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டிருந்தது எனக்கு தெரிந்தது. அதிர்ந்து போன நான் சற்றே சுதாரித்துக் கொண்டு எனது செல்போனில் அவரைப் படம் பிடித்தேன். 
 
இந்த சம்பவம் குறித்து நான் பேருந்தில் கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை. பின்னர் அந்த நபர் அடுத்த நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார். ஆனால், இதை என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை.
 
எனவே, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, டெல்லி போலீஸ், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் சில அதிகாரிகளையும் டேக் செய்தேன். மேலும் நேரடியாகவும் போலீஸில் புகார் அளித்தேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தற்போது, மாணவி அருகே அமர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25000 சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர். அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்.பி.ஜி லாரி உரிமையாளர்களின் 6 நாள் தொடர் வேலைநிறுத்தம் வாபஸ்