மோடி பதவியேற்பு விழாவில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 352 இடங்கள் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பல மாநில அரசியல் கட்சியினரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் விழாவில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மம்தா “பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு மாநில தலைவர்கள் அழைக்கப்படுவது வாடிக்கைதான். பங்கேற்க அழைப்பு வந்தால் அரசியல் சாசன நடைமுறைகளின்படி கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கலந்து கொள்வேன்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணம் திருணாமூல் காங்கிரஸ்தான் என பாஜகவினர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்வதாக கூறியுள்ள அவர் அதனால் மோடிப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மறுத்துள்ளார்.