கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அனைத்துக் கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு சேதாரங்களை ஏற்படுத்தியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டி இருந்தது. அரசியல் கட்சிகள் கட்டுப்பாடுகளை மீறி கூட்டங்களை நடத்திய போது எங்கே போயிருந்தீர்கள் எனக் கேள்வியும் எழுப்பியது. இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த கருத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரித்துள்ளார்.