Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாத மோடி நாடகமாடுகிறார்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாத மோடி நாடகமாடுகிறார்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாத மோடி நாடகமாடுகிறார்: மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு!
, புதன், 9 நவம்பர் 2016 (12:29 IST)
இன்று முதல் தற்போது உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று இரவு அறிவித்தார். அவற்றை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெறலாம் கூறப்பட்டது.


 
 
கருப்பு பணத்தை மீட்க, கள்ள பணத்தை தடுக்க அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை என பலரும் பாராட்டினாலும், இதற்கு எதிர்ப்பும் இருந்து வருகிறது. பொது மக்கள் தங்கள் அன்றாடு செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளார். அரக்கத்தனமான இந்த முடிவை உடனே திரும்ப பெற வேண்டும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

webdunia

 
 
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி அதனை மீட்க முடியாமல் போனதை திசை திருப்ப தற்போது நாடகமாடுகிறார். இந்திய மக்கள் மீது நிதி குழப்பம் மற்றும் பேரழிவை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

webdunia

 
 
இந்த அரக்கத்தனமான கடுமையான முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார் மம்தா பானர்ஜி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ள நோட்டுகளை ஒழிப்பது எப்படி? - +2 மாணவர்களின் சூப்பர் ஐடியா!