Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை: மீட்பு பணிகள் தீவிரம்

நிலச்சரிவில் சிக்கிய பிரபல நடிகை: மீட்பு பணிகள் தீவிரம்
, செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (17:28 IST)
இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மலையாள நடிகை மற்றும் படக்குழுவினரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

“அங்கமாலி டைரீஸ்” என்னும் மலையாள படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சணல்குமார் சசிதரன். இவரது “கயாட்டம்” என்ற படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இமாச்சல பிரதேசத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் மலையாள பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சணல்குமார் குழுவினர் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த சத்ரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. படக்குழுவினர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் மஞ்சு வாரியரின் சகோதரர் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் முரளிதரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முரளிதரன் இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு தகவல் அளித்ததன் பேரில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை வேகமாக நடத்தி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர்: பள்ளிகள் திறந்தன, மாணவர்கள் வருகை மிகவும் குறைவு