Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகளுக்கான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய அரசு அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (08:36 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டும் வருகிறது. விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்திருந்த ஒருசில நாடுகள் தடையை விலக்கிய பின்னரும் இந்தியாவில் மட்டும் தடை நீட்டிக்கப்பட்டு வந்ததற்கு ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன
 
இந்த நிலையில் தற்போது விடுதலைப்புலிகளுக்கான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை சற்றுமுன் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன என்றும், விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன என்றும், மத்திய அரசு அந்த தடை உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பை அடுத்து இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கான தடை வரும் 2024ஆம் ஆண்டு வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் உள்ள ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments