Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

Siva
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (16:34 IST)
பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன் என டெல்லி பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு பேசியதை அடுத்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.


டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ள நிலையில் பாஜக சார்பில் கல்காஜி என்ற தொகுதியில் போட்டியிடும் ரமேஷ்  என்பவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அவர் தனது முதல் பிரச்சாரத்தில்  டெல்லி சாலைகளை பிரியங்கா காந்தியின் கன்னத்தை போல் பளபளவென ஆக்குவேன் அவர் கூறியுள்ளார். ஹேமாமாலினி கன்னங்களை போல் சாலைகளை ஆக்குவேன் என்று பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது லாலு பிரசாத் கூறினார் என்றும், அதை அவரால் செய்ய முடியவில்லை, ஆனால் நான் பிரியங்கா காந்தி கன்னம் போல் சாலைகளை மாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அவருடைய பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments