அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் இன்று யாத்திரை செல்ல முயன்ற நிலையில், நடிகை குஷ்பு உட்பட 500க்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து, மதுரையிலிருந்து சென்னை வரை நீதி யாத்திரை தொடங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இன்று காலை, மதுரை செல்லத்தம்மன் கோயில் அருகே நீதி யாத்திரை தொடங்கிய நிலையில், பாஜக மகளிர் மாநில தலைவர் உமாரவி தலைமை தாங்கினார். நடிகை குஷ்பு உள்பட ஏராளமான மகளிர் அணியினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி, யாத்திரை தொடர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினார்கள். ஆனால் தடையை மீறி யாத்திரை செல்ல முயன்றதால், குஷ்பு உட்பட 500க்கும் மேற்பட்ட தமிழக பாஜக மகளிர் அணி அன்னார் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.