அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 தேதிக்குள் கடிதங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெற உள்ளது.
தேசிய அளவில், அஞ்சல் துறை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் இந்த கடிதம் எழுதும் போட்டி, இந்த ஆண்டும் நடக்கிறது. "எண் யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் கடிதம் எழுத வேண்டும். பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து வயதினரும் இதில் கலந்து கொள்ளலாம்.
முக்கிய நிபந்தனைகள்:
500 வார்த்தைகளை மீறாமல், ஏ4 தாளில், தமிழ், ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளில் எழுத வேண்டும்.
உள்நாட்டு கடிதமாக அனுப்ப வேண்டும்.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் சுய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்..
பரிசுகள்:
முதல் பரிசு: ₹50,000
இரண்டாம் பரிசு: ₹25,000
மூன்றாம் பரிசு: ₹10,000
இவை மாநில மற்றும் தேசிய அளவில் வழங்கப்படும்.
முகவரி:
பொது மேலாளர்,
தமிழ்நாடு வட்ட தலைமை,
அஞ்சல் துறை,
சென்னை – 600002,
என்ற முகவரிக்கு ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.