Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்:  தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

Siva

, திங்கள், 30 டிசம்பர் 2024 (07:26 IST)
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: "அன்பு தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லன்னா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்தது. அதற்காகவே, இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும்! எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்."

இவ்வாறு விஜய் எழுதிய இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!