Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலினுக்கு பயம் வந்துட்டு.. அதான் ஆன்மிகம் பேசுறார்! – எல்.முருகன்!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (12:24 IST)
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின், விவேகானந்தர் குறித்து பேசியுள்ளது அவரது பயத்தை காட்டுவதாக பாஜக எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மாவட்ட நிர்வாகிகளோடு காணொளி வழியாக பேசி வரும் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விவேகானந்தரை மேற்கோள் காட்டி பேசியுள்ளார். முன்னதாக கருப்பர் கூட்டம் விவகாரத்தின்போதும் திமுக மத நம்பிக்கைகளுக்கு எதிரான கட்சி அல்ல என பேசியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “ஸ்டாலினுக்கு தேர்தல் குறித்த பயம் வந்துவிட்டதால் விவேகானந்தர், ஆன்மிகம் என பேசுகிறார். கடவுள் இல்லை என சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்திருந்த கஸ்டமர்கள்; கண்டுக்காத ஊழியர்கள்! – ரணகளமான ஹோட்டல்!