இன்று முதல் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருந்த நிலையில் பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் கமல்ஹாசன் இன்று மதுரையிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
மதுரையின் நான்கு இடங்களில் அவர் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் கொரோனா காரணமாக முக்கிய நகரப்பகுதிகளில் மக்களை கூட்டவும், பிரச்சாரம் செய்யவும் அரசு அனுமதி மறுத்துள்ளது.
அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ள கமல்ஹாசன் “முக்கிய நகரப்பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அரசு அனுமதி மறுத்துள்ளது. அரசின் அறிவுறுத்தலை ஏற்று மய்யம் மற்ற இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” என கூறியுள்ளார்.