Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்து ஆண்களுக்கு மேல் திருமணம் செய்து ஏமாற்றிய கேரள பெண்

Advertiesment
பத்து ஆண்களுக்கு மேல் திருமணம் செய்து ஏமாற்றிய கேரள பெண்
, செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (14:24 IST)
இந்தியாவில் பணத்தை திருட,  திருமணம் எனும் பெயரில் மோசடி சம்பவங்கள் அரங்கேறுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தொழில் நுட்பங்களும், நாகரிகமும் வளர்ந்து கொண்டே போகும் வேலையில், ஆங்காங்கே நூதன முறையில் மோசடி சம்பவங்களும்  வளர்ந்து கொண்டே வருகிறது.
 
இந்நிலையில் கேரள மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், பத்திரிக்கையில் தான் கணவனை இழந்த பெண் என்றும் மறுமணம் செய்ய மணமகன் என்றும் விளம்பரம் அளித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து இளைஞர் ஒருவர் ஷாலினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஷாலினி அந்த இளைஞரிடம் இஷ்டத்திற்கும் பொய் கூறியிருக்கிறார், தாம் ஒரு மென்பொருள் பொறியாளர் என்றும் விரைவில் தமக்கு அரசு வேலை கிடைக்கப்போவதுமாய் அளந்து விட்டுருக்கிறார். மேலும் தான் ஒரு அனாதை என்று கூறியிருக்கிறார்.
 
இந்த ஏமாற்றுப் பேச்சை நம்பிய இளைஞர், ஷாலினியை திருமணம் செய்ய திட்டமிட்டு, அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு வந்த நபர் ஒருவர், ஷாலினியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் அவரது நண்பரின் முன்னால் மனைவி தான் ஷாலினி. திருமணம் எனும் பெயரில் வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஷாலினி.
 
இதனையடுத்து ஷாலினி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் ஷாலினி இதுபோல் 10 க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை திருடியது தெரிவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்