இந்தியருக்கு அடித்தது ரூ.17.5 கோடி ஜாக்பாட்

திங்கள், 5 பிப்ரவரி 2018 (18:48 IST)
கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் என்பவர் அபுதாபி நாட்டில் நடந்த லாட்டரி பரிசு போட்டியில் 17.5 கோடி ரூபாய் வென்றுள்ளார்.

 
கேரள மாநிலத்தை சேர்ந்த சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் என்பவர் அபுதாபி நாட்டில் சில ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு அங்கேய வாழ்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு தனது மூன்று நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து 500 திர்ஹம் (இந்திய மதிப்புபடி ரூ.8735) கொடுத்து வாங்கிய பரிசு சீட்டுக்கு ஒரு கோடி திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 17 கோடியே 68 லட்சம் ரூபாய்) ஜாக்பாட் அடித்துள்ளது.
 
இந்த பரிசுச் தொகையை தன்னுடைய மூன்று நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதாக சுனில் மப்பட்டா கிருஷ்ணன் குட்டி நாயர் தெரிவித்துள்ளார்.
 
இதே போல கடந்த ஆண்டு அஜ்மன் நகரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் நாயர் என்பவர் ‘பிக் டிக்கெட் குலுக்கல்’ லாட்டரி முலம் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் திர்ஹம் பரிசு தொகையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் மாயன் நகரத்தை கண்டுபிடித்த கெளதமாலா நாட்டினர்...