Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிவி ரிப்பேர், செல்போனில் சார்ஜ் இல்லை: மனமுடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

Advertiesment
டிவி ரிப்பேர், செல்போனில் சார்ஜ் இல்லை: மனமுடைந்த 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
, செவ்வாய், 2 ஜூன் 2020 (17:32 IST)
டிவி ரிப்பேர் ஆக இருந்ததாலும் செல்போனில் சார்ஜ் இல்லாததாலும் ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் தனக்கு தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பதால் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி சேனலின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஸ்மார்ட்போன் மூலமும் பாடங்களை மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தங்கள் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பழுதடைந்து விட்டதால் ஆன்லைன் மூலம் பாட வகுப்புகளை பார்க்க முடிவு செய்தார். ஆனால் அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவற்றின் மூலம் பாடங்களை பார்க்க முடியாததால் மனமுடைந்த அவர் தன்னைத் தானே தீயிட்டு கொண்டுள்ளார்
 
தீயினால் படுகாயம் அடைந்த மாணவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி இறந்து விட்டார். ஆன்லைனில் பாடத்தை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட் விலையில் கலக்க வரும் HOT 9 pro ஸ்மார்ட்போன்!