தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வை ஜூன் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும் வெளியூரிலிருந்து மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் வெளியூரிலிருந்து வரும் மாணவர்களை தனி அறையில் அமர வைக்க வேண்டும் என்றும் மாணவர் விடுதிகளை ஜூன் 15ஆம் தேதி முதல் தேர்வு முடியும் வரை திறந்து வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மறுசுழற்சி முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது