Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறிகுறியே இல்லாமல் திடீரென வந்த கொரோனா: கேரள மாணவி அதிர்ச்சி

Advertiesment
அறிகுறியே இல்லாமல் திடீரென வந்த கொரோனா: கேரள மாணவி அதிர்ச்சி
, செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (07:56 IST)
கொரோனா வைரஸ் பாதிக்கும் நபர்களுக்கு முதலில் சளி, காய்ச்சல், உடல் வெப்பநிலை திடீரென அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என்பதால் அந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
ஆனால் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனா வைரஸ் தொற்று கேரள மாணவி ஒருவருக்கு பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வடமாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு வந்த அந்த மாணவி ஒருவர், கேரள அரசு மருத்துவர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் அவரை கண்காணித்து வந்தனர். அதில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்பது உறுதியானது 
 
இந்த நிலையில் திடீரென நேற்று அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக ரத்தப்பரிசோதனை தெரியவந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14 நாட்கள் தங்களது கண்காணிப்பில் இருந்த அந்த மாணவிக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாத நிலையில் ஒரே நாளில் திடீரென கொரோனா வைரஸ் தொற்று அவருக்கு பரவியது எப்படி என்பது மருத்துவ உலகிற்கே புரியாத புதிராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனாவின் கொடூரத்தின் அடுத்த கட்டத்தை நாம் தற்போது பார்த்து வருகிறோம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் வரை ஊரடங்கு உத்தரவா? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்