Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா விடுமுறையில் தீனா செய்த காரியத்தை பாருங்கள்

Advertiesment
கொரோனா விடுமுறையில் தீனா செய்த காரியத்தை பாருங்கள்
, திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:18 IST)
கொரோனா விடுமுறையில் தீனா செய்த காரியத்தை பாருங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எந்நேரமும் பிஸியாக இருந்த நடிகர்-நடிகைகள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஏதாவது சில வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
 
இந்த வீடியோக்கள் சில சமயம் கோமாளித்தனமாகவும், சில சமயம் அறிவுபூர்வமாக உள்ளது என்பதும், இருப்பினும் அவை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் நடிகரும் தொலைக்காட்சி பிரமுகருமான தீனா ஒரு உருப்படியான விஷயத்தை கற்று கொண்டுள்ளார்.
 
தீனா தனது வீட்டில் உள்ள மாடுகளில் இருந்து பால் கறக்க கற்றுக் கொண்டுள்ளார். அவரே மாடுகளுக்கு பால் கறக்கும் காட்சி குறித்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
 
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவர் மனதிலும் இடம் பெற்ற தீனா, தற்போது விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படம் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்