Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரி மலையின் புனிதத்தை காக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: கேரளா எம்.பி. வலியுறுத்தல்

சபரி மலையின் புனிதத்தை காக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: கேரளா எம்.பி. வலியுறுத்தல்
, வியாழன், 20 ஜூன் 2019 (12:31 IST)
சபரி மலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரளாவைச் சேர்ந்த எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டில், சபரி மலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் வரக் கூடாது என்று கேரளா உயர் நீதிமன்றம் சட்டம் இயற்றியது. அதற்கு முன்பே பெண்கள், சபரி மலைக்குள் அனுமதிக்ககூடாது என்ற வழக்கம் இருந்து வந்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய வக்கீல் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வக்கீல்கள், சபரி மலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர்.

இதனைத் தொடந்து சபரி மலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று பல பெண்ணிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் எல்லா வயது பெண்களும் சபரி மலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல இந்து அமைப்பினர், போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சபரி மலையில் பெண்கள் செல்வதை தடுத்து பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க, கேரள மாநிலம் கொல்லம் தொகுதி எம்.பி. பிரேம சந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை கொண்டு வந்துள்ளார்.

மேலும் சபரி மலையின் புனிதத்தை பாதுகாக்க, மத்திய அரசுக்கு எம்.பி.பிரேம சந்திரன், கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்கு இனிமேல் ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது – நிதி ஆயோக் அதிர்ச்சி ரிப்போர்ட்