Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை யானை தின்றதா? புது கோணத்தில் செல்லும் வழக்கு!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (15:05 IST)
கேரளாவில் வெடி வைக்கப்பட்டு இருந்த அண்ணாசிப் பழத்தை சாப்பிட்ட யானை இறந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், மலப்புரம் கிராமத்துக்கு அருகில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.

இதையடுத்து வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை, அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்கவில்லை. இதையடுத்து வெள்ளியாற்றில் இறங்கி நின்றுள்ளது அந்த யானை. வனத்துறை அதிகாரிகள், அந்த யானையை கும்கி யானைகளோடு மீட்க முயன்றுள்ளனர். ஆனால் ஆற்றை விட்டு வெளியே வராத அந்த யானை, மே 27 ஆம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் முன் நடந்த பிரேதப் பரிசோதனையில் அந்த யானையின் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.

அந்த யானைக்கு அண்ணாசிப் பழம் கொடுக்கப்பட்டது குறித்து விவரம் தெரியவில்லை. மேலும் பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட அண்ணாசிப் பழத்தை யானை சாப்பிட்டதா என்றும் விசாரணை நடக்கிறது. இதுவரை அண்ணாசிப் பழத்தில் விஷம் வைத்தது யார் என்று தெரியாததால் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments