வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்நாடகா நிதியுதவி: பாஜக எதிர்ப்பு..!

Siva
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (16:01 IST)
கர்நாடக அரசின் துணை பட்ஜெட்டில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளுக்கு உள்ளான 100 குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ரூ.10 கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 
பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா இதுகுறித்து கூறுகையில்,  "கர்நாடகாவில் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். ஆனால், முதல்வர் இன்னும் பயிர் சேதங்களை மதிப்பிட அதிகாரிகளை அனுப்பவில்லை. ஆனால், இந்த அரசு கேரளாவிற்கு நிதி வழங்குவதில் மும்முரமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
 
பாஜக எம்எல்ஏ அஸ்வத் நாராயண்,  "கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மீண்டும் மீண்டும் வரி செலுத்துவோர் பணத்தை தவறாக பயன்படுத்துகிறது’ என்று கூறினார்.
 
இருப்பினும், காங்கிரஸ் இதுகுறித்து விளக்கமளிக்கையில்  "பிரதமர் மோடி மனிதாபிமான அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பினார். நமது அண்டை மாநிலங்களுக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கிறது?   என்று கூறியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments