Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய சிறுவர்கள் கைது! – கர்நாடகாவில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (09:49 IST)
கர்நாடகாவில் காபி தோட்டத்தில் பணிபுரிந்த சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதேசமயம் நியூசிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ALSO READ: குஜராத் தொங்கு பால விபத்து; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அதானி ரூ.5 கோடி!

பாகிஸ்தானின் இந்த வெற்றியை கர்நாடக மாநிலம் சிக்கமக்களூரில் உள்ள காபி தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த சிலர் கொண்டாடியுள்ளனர். இதனால் அவர்கள் மேல் சந்தேகம் எழுந்ததால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய நால்வரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் அசாமை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. எனினும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments