Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

38 பேரை சுட்டுக்கொன்ற போலிஸ் - 31 ஆண்டுகள் கழித்து தண்டனை

38 பேரை சுட்டுக்கொன்ற போலிஸ் - 31 ஆண்டுகள் கழித்து தண்டனை
, ஞாயிறு, 4 நவம்பர் 2018 (08:23 IST)
1987-ம் ஆண்டு  உத்தரப் பிரதேச மாநிலம் பாபர் ஹஷிம்புராவில் மசூதி இடிப்பு சம்மந்தமான கலவரங்களின் போது 38 முஸ்லிம்களைக் கடத்திச் சென்று சுட்டுவீழ்த்தி படுகொலை செய்த உத்தரப்பிரதேச ஆயுதப்படையை (PAC) சேர்ந்த 16 முன்னாள் வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பாபர் மசூதி விவகாரத்தின் போது வட இந்தியா முழுவதும் ஆங்காங்கே கலவரங்கள் நடந்தன. கலவரத்தைக் கட்டுப்படுத்த அந்த பகுதிகளில் ஆயுதப்படை போலிசார் பணியமர்த்தப்படனர். அபோது ஹஷிம்புராவில் பணியில் இருந்த காவலர்களின் 2 துப்பாக்கிகள் மர்ம நபர்களால் திருடப்பட்டன. மேலும் ஆயுதப்படை வீரரின் உறவினர் ஒருவரும் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயுதப்படை வீரர்கள் ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லீம்கள் 45 பேரை விசாரணைக்கு எனப் பொய் சொல்லி லாரிகளில் ஏற்றிச்சென்று காஸியாபாத் கால்வாய் அருகே கொண்டு சென்று கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தினர். இதில் 38 பேர் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரது உடல் கால்வாயில் அடித்து செல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தது போல நடித்தும் ஆற்றில் விழுந்து நீந்தி கரை சேர்ந்த சிலரும் உயிர்பிழைத்து வாக்குமூலம் கொடுத்தபின் ஆயுதப்படை வீரர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத செயலுக்கு தற்போதுதான் நீதி கிடைத்துள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் நீதி அளித்த டேலி உயர்நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 17 பேரில் 16(ஒருவர் இறந்துவிட்டார்) பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் இந்த சம்பவத்தில் சம்மந்த பட்ட உயரதிகாரிகள் யாருக்கும் தண்டனை வழங்கபடவில்லை. கீழ்மட்ட வீரர்களுக்கே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி தற்கொலை : கொடூர கணவனுக்கு சிறை...