Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாலு பிரசாத் மீதான இன்னொரு வழக்கில் இன்று தீர்ப்பு: பரபரப்பில் பீகார் மாநிலம்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (06:40 IST)
கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் சுரண்டப்பட்ட வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான இன்னொரு வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்படவுள்ளது. இந்த வழக்கிலும் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படுமா? என்ற அச்சத்தில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர்.

லாலு பிரசாத் யாதவ் மீது சாய்பாஸா மாவட்டத்தில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து ரூ.35.62 கோடி பணம் எடுத்த வழக்கில் தான் இன்று தீர்ப்பை வழங்கவுள்ளதாக  சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். பிரசாத் சமீபத்தில் அறிவித்தார். இந்த வழக்கின் விசாராணை சென்ற கோணத்தை வைத்து பார்க்கும்போது லாலுவுக்கு இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை பாதகமாக தீர்ப்பு வந்தாலும் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வழக்கு போக இன்னும் இரண்டு வழக்குகள் லாலு மீது உள்ளது என்பதும், அந்த வழக்குகளின் தீர்ப்புகளும் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments