Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிவினைவாதி ஒற்றுமைக்காக சிலை திறந்தாரா? கேலி செய்யும் ஜிக்னேஷ்

பிரிவினைவாதி ஒற்றுமைக்காக சிலை திறந்தாரா? கேலி செய்யும் ஜிக்னேஷ்
, புதன், 31 அக்டோபர் 2018 (16:42 IST)
உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இதனை குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கேலி செய்து பேசியுள்ளார். 
 
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் பிறந்தவர். இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். 
 
இதனால், அவருக்கு குஜராத்தில் சிலை வைக்க பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.
 
பிறகு அந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் மிக பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. ரூ.2,989 கோடி செலவில் இந்த சிலை கட்டப்பட்டிருக்கிறது. 
 
இந்நிலையில் குஜராத்தின் வட்கம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, ஒரு மனிதரின் மொத்த அரசியலும் பிரிவினையை மையப்படுத்தி இருக்கும் போது அப்படிப்பட்ட நபர் ஒற்றுமைக்காக நின்ற மனிதரின் சிலையை திறப்பதா, என்ன ஒரு வினோதம் என்று மோடியை கிண்டல் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார வழக்கு : உயர் நீதிமன்றம் அதிரடி...