ஹரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்திருக்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீ நயினா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நட்டா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பாடுகள் மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்றும், இதன் காரணமாக மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹரியானா தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, ஜம்மு காஷ்மீரிலும் நிறைய சாதித்து உள்ளது என்றும், இதன் பெருமை அனைத்தும் மக்களுக்கே சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 29 இடங்களை பாஜக கைப்பற்றி உள்ள நிலையில் அடுத்த தேர்தலில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது