இந்திய அரசின் நேதாஜி விருது ஜப்பான் முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பல்வேறு வீரர்கள் போராடிய நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் முக்கியமானவராக திகழ்கிறார். ஆசாத் ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரை அவர் எதிர்த்த போக்கு மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆசாத் ராணுவத்தை அமைத்து பர்மாவை கைப்பற்றி இந்தியாவிற்குள் நுழைய ஆசாத் ராணுவம் செய்த முயற்சி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இன்று நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்திய அரசின் நேதாஜி விருதை ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்திய அரசு வழங்கியது. நேதாஜி இல்லத்தில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் ஜப்பான் தூதரக ஜெனரல் நகமுரா யுடகா, அபே சார்பில் விருதை பெற்றுக் கொண்டார்.