ஐ.டி. ஊழியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி வாங்கவேண்டும்; சுகாதாரத்துறை கறார்.

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (19:21 IST)
ஐ.டி.ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கூறியுள்ளார்.

சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. இது வரை கொரோனா வைரஸால் இந்தியாவில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஈரான் ஆகிய உலக நாடுகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொறியாளர்கள் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் சுகாதாரத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என கர்நாடகாவின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவைத் அக்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments