Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ்: விடுவிக்கப்படும் 54 ஆயிரம் இரான் கைதிகள்!

Advertiesment
கொரோனா வைரஸ்: விடுவிக்கப்படும் 54 ஆயிரம் இரான் கைதிகள்!
, புதன், 4 மார்ச் 2020 (14:45 IST)
கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகளைக் காண்போம்.
 
# கொரோனா அச்சம் காரணமாக 54,000 கைதிகளை இரான் அரசு தற்காலிகமாக விடுவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை பெற்றவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டிருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
# இரானில் மட்டும் 2336 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர்.
# இரான் தெஹ்ரானில்தான் அதிக அளவில் இறப்பு பதிவாகி உள்ளது. அங்கு 1043 பேர் பலியாகி உள்ளனர்.
# இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள மரணங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் அந்நாட்டில் இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது.
# இத்தாலியில் பெரும்பாலான உயிரிழப்புகள் லோம்பார்டி பகுதியில் தான் நடந்துள்ளது.
# இதேபோல் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
# அமெரிக்காவில் இறந்தவர்கள் அனைவருமே வாஷிங்டனை சேர்ந்தவர்கள் ஆவர்.
# மேலும் ஸ்பெயினில் கடந்த பிப்ரவரி 13-ஆம் இறந்த ஒரு 69 வயது நபரின் உடலை உடல் கூறாய்வு செய்ததில், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிகழ்ந்த முதல் மரணம் இதுவாகும்.
# தென்கொரியா, இத்தாலி மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தொற்றுநோய் ஆய்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
# இரானில் உளவு பார்த்ததாகக் கைது செய்யப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த நஜானின் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இவரும் தெஹ்ரான் இவின் சிறையில்தான் உள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ் பரவும் அச்சம், தயார் நிலையில் இலங்கை அரசு - விரிவான தகவல்கள்