Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டம்; 3 பேர் கைது

Advertiesment
குடியரசு தினத்தை சீர்குலைக்க திட்டம்; 3 பேர் கைது

Arun Prasath

, வியாழன், 9 ஜனவரி 2020 (18:20 IST)
குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் ஐ எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் சந்தேகப்படும்படியான 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஐ எஸ் பயங்கரவாதிகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இந்தியாவில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில் டெல்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியில் சிறப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது,  ஐ எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ரயில்வே லெவல் கிராஸிங்'கை மூட கீழே இறங்கிய ரயில் ஓட்டுநர் ... வைரல் வீடியோ