Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரத்தை வரவேற்கிறாரா ராகுல்? பாஜக பெண் எம்பி பாய்ச்சல்!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:58 IST)
ராகுல் காந்தி பெண்களை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம் என்பதை வரவேற்கிறாரா என பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. மக்களவை கூட்டத்தில் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி ”நரேந்திர மோடி மேக் இன் இந்தியாவை உருவாக்குவதாக கூறினார். ஆனால் இப்போது எங்கு பார்த்தாலும் ரேப் இன் இந்தியாவாக உள்ளது. உத்தரபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் இதுபற்றி நரேந்திரமோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறினார்.
ராகுல்காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு எதிராக பாஜக பெண் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ராகுலோ மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், பாஜக பெண் எம்பி லாக்கெட் சாட்டர்ஜி இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, பிரதமர் மோடி 'மேன் இன் இந்தியா' என்று கூறிவருகிறார். ஆனால் ராகுல் காந்தியோ 'ரேப் இன் இந்தியா' என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் ராகுல் காந்தி பெண்களை யார் வேண்டுமானாலும் கற்பழிக்கலாம் என்பதை வரவேற்கிறாரா. இப்படி பேசியதன் மூலம் ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்திய பெண்களையும் அவமதித்துவிட்டார். பாரத மாதாவையும் அவமரியாதை செய்துவிட்டார் என்று பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2: கணினி வழி தேர்வு ரத்து: ஓ.எம்.ஆர் முறையில் தேர்வு நடத்த திட்டம்..!

அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை: தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்