Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்லாமியர்களை குறி வைக்கும் பாஜக அரசு? – சூடுபிடிக்கும் விவாதம்!

இஸ்லாமியர்களை குறி வைக்கும் பாஜக அரசு? – சூடுபிடிக்கும் விவாதம்!
, செவ்வாய், 10 டிசம்பர் 2019 (13:42 IST)
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்த விவாதங்கள் இணையத்தில் சூடுபிடித்து வருகின்றன.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்ட திருத்த மசோதா மக்களைவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா நிறைவேறியுள்ள நிலையில் ’இது மோடி அரசின் இந்துத்துவ சிந்தனையை செயல்படுத்துவதாக உள்ளது’ என பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் மோடியின் பாஜக அரசு இஸ்லாமியர்களை திட்டமிட்டு புறம் தள்ளிவதாகவும், வங்காளத்திலிருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் கூட நிறையே பேர் இந்தியாவில் வந்து வாழ்ந்து கொண்டிருக்க அரசு இஸ்லாமியர்களை மட்டும் திருப்பியனுப்பும் நோக்கில் சட்டம் இயற்றியுள்ளதாகவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்களை “பாகிஸ்தானுக்கு போங்கள்” என பாஜக ஆதரவாளர்கள் கூறுவது மேலும் சமநிலைத்தன்மை அற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் மக்கள் உரிமைகளை அரசு பறித்துக் கொண்டதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவாதம் குறித்து # Muslim மற்றும் # #CABBill ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சி தாவும் முக்கிய எக்ஸ் மினிஸ்டர்... வரவேற்கும் திமுக; வெறுப்பாகும் அதிமுக!