Publish Date: Mon, 09 Dec 2019 (18:40 IST)
Updated Date: Mon, 09 Dec 2019 (18:48 IST)
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் அநீதி என்ற கேள்விக்கே இடமிலை என அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.
அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லாததால் இது சிறுபான்மையினருக்கு எதிரானது எனவும் அரசியலமைப்பு சட்டத்தின் அனைவரும் சமம் என்ற சட்டவிதிகளுக்கும் எதிரானது எனவும் எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களைவியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பின்னணியில் எந்த அரசியல் பின்புலமும் இல்லை எனவும், இதில் அநீதி என்ற கேள்விக்கே இடமில்லை” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.