இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம்.. ஒரே நாளில் 2 கொலைகள்.. பரிதாபத்தில் 2 குடும்பங்கள்..!

Siva
ஞாயிறு, 22 ஜூன் 2025 (11:57 IST)
உடுப்பி மாவட்டம், பிரம்மவரா தாலுகா, ஹிலியானா கிராமத்தை சேர்ந்த கணேஷ் பூஜாரி தனது மனைவி ரேகா இன்ஸ்டாகிராம் ரீல்களை மணிக்கணக்கில் விடாமல் பார்த்து வந்ததால் கோபமடைந்தார். 
 
இதை அவர் கண்டித்தும் ரேகா கேட்காததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு நாள் இரவு, பணி முடிந்து திரும்பிய கணேஷ் பூஜாரி, ரேகா ரீல்களை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்து, கத்தியால் அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தார். கணேஷ் பூஜாரியை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
 
இதேபோல், சாமராஜ்நகர் மாவட்டம், பி.ஜி. பால்யா பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். குடும்பத்தினர் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. 
 
நண்பர்கள் கிண்டல் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குமார், தனது மனைவியின் இந்த செயலை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்டாகிராம் ரீல் மோகம் ஒரு குடும்பத்தை அழித்ததும், மற்றொரு குடும்பத்தில் உயிர்ப்பலியும் ஏற்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments