Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏ திடீர் மறைவு.. இடைத்தேர்தல் எப்போது?

Mahendran
ஞாயிறு, 22 ஜூன் 2025 (11:26 IST)
கோவை மாவட்டம் வால்பாறை அதிமுக எம்எல்ஏவான அமுல் கந்தசாமி, உடல்நலக்குறைவு காரணமாக திடீரென காலமானார். இதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அன்னூர் பகுதியை சேர்ந்த அமுல் கந்தசாமி, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
 
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்தது. கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 60.
 
அவரது மறைவையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அதிமுக பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று இரவு தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வால்பாறை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments