Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸுக்கு புதிய தலைவர்?? கூடுகிறது செயற்குழு கூட்டம்

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:50 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தபிறகு நீண்ட நாட்கள் கழித்து காங்கிரஸின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றதை அடுத்து, தோல்விக்கு தார்மீக பொறுப்பெடுத்து தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ராகுல் காந்தி.

ராகுலின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாத கட்சியினர் தொடர்ந்து தலைவர் பதவியில் ராகுல் காந்தியை இருக்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார்.

இந்நிலையில் இன்று கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் பொது செயலாளராக பணியாற்றிய முகுல் வாஸ்னிக் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒரு மிகப்பெரும் தேசியக்கட்சி எடுக்கப்போகும் முக்கியமான முடிவு இது என்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments