Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தேர்தல்: தமிழ்நாடு மது குடிப்போர் சங்கத்தின் வேட்பாளர் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா?

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (08:23 IST)
தேர்தலில் போட்டியிடுவது ஒருசில லெட்டர்பேட் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி ஒருசில அமைப்புகளுக்கும் விளையாட்டாக மாறியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த வேலூர் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மதுகுடிப்பேர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பிலும் ஒரு வேட்பாளர் போட்டியிட்டார். அவருக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது என்பதுதான் ஒரு ஆச்சரியமான தகவல். இதுகுறித்து அந்த வேட்பாளர் டாஸ்மாக் விரும்பிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:
 
2530 வாக்குகள் அள்ளிதந்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவை வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயபூர்வமான நன்றியை பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் பாசமிகு நண்பர்களுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் இதயபூர்வமான நன்றி நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
 
வேலூரில் திமுக சுமார் 8000 வாக்குகள் மட்டுமே வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற சுயேட்சைகளும் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளனர் என்பது தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments